ஜெ. வழக்கில் உடனே அப்பீல் செய்க.. கர்நாடக முதல்வரிடம் ஜி.கே.மணி நேரில் வலியுறுத்தல்
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி எழுதிய கடிதத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி, சித்தராமையாவிடம் வழங்கினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுவித்த நிலையில், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு அப்பீல் செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் நேற்று அறிக்கைவிடுத்திருந்தனர்.

தீர்ப்பில், பெரிய ஓட்டை இருப்பதாகவும், கணக்கீட்டில் தவறு செய்யப்பட்டுள்ளதாகவும், முதலில் அறிக்கை வெளியிட்ட அரசியல் தலைவர் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகும். இதைத் தொடர்ந்து கருணாநிதி, இளங்கோவன் போன்ற தலைவர்களும் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று, பெங்களூரு வந்த பாமக மூத்த தலைவர் ஜி.கே.மணி மற்றும் அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு ஆகியோர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்தனர். அரசு இல்லமான 'காவிரி'யில் இந்த சந்திப்பு மதியம் நடைபெற்றது.
அப்போது, பாமக நிறுவனர், ராமதாஸ், சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தை ஜி.கே.மணி அளித்தார். அந்த கடிதத்தில், ஜெயலலிதா வழக்கில் ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். சித்தராமையா-ஜி.கே.மணி இடையேயான இந்த சந்திப்பு சுமார் 15 நிமிட நேரங்களுக்கு நீடித்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications