சிறை வளாகத்தில் எஸ்.பியின் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பட்டுள்ளாரா ஜெயலலிதா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள எஸ்.பி.யின் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா டுடே செய்தியில் வேறு விதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியா டுடே செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

கெஸ்ட் ஹவுஸ்

கெஸ்ட் ஹவுஸ்

நடிகையாக இருந்து அதிமுக தலைவரான ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் உள்ள எஸ்.பி.யின் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

வசதிகள்

வசதிகள்

ஜெயலலிதா இருக்கும் விருந்தினர் மாளிகையில் ஏ.சி. வசதி கொண்ட அறைகள், தொலைக்காடசி, தொலைபேசி வசதி உள்ளது. தொலைபேசியை பயன்படுத்த அவர் ஜெயிலரின் அனுமதியை பெற வேண்டும். ஜெயலலிதா ஒரு அறையில் இருக்க மற்றொரு அறையில் சசிகலாவும், இளவரசியும் உள்ளனர்.

சுதாகரன்

சுதாகரன்

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன் சுரங்க ஊழல் வழக்கில் கைதான முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி உள்ள அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனை

மருத்துவமனை

ஜெயலலிதாவை போலீசார் சனிக்கிழமை இரவு தெற்கு பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகு ஜெயலலிதா மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்பட்டார்.

எதியூரப்பா

எதியூரப்பா

தற்போது ஜெயலலிதா இருக்கும் அதே அறையில் தான் முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பா தங்கியிருந்தார்.

ஜனார்தனன்

ஜனார்தனன்

சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவை சந்திக்க ஜனார்தனன் ரெட்டி முயற்சி செய்துள்ளார் என்று இந்தியா டுடே செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+