For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு பெரும் வெற்றி -தேமுதிக, பாஜக கூட்டணிக்கு சம்மட்டி அடி: கருத்துக் கணிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்றும், திமுக 2வது இடத்தைப் பிடிக்கும் என்றும் என்டிடிவி கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

அதேசமயம் மெகா கூட்டணி என்று வர்ணிக்கப்படும் தேமுதிக - பாஜக - பாமக - மதிமுக கூட்டணிக்கு மிகப் பெரிய அடி கிடைக்கும் என்றும், அவர்களுக்கு அவர்களுக்கு அதிகபட்சம் 2 சீட் மட்டுமே கிடைக்கும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுகவுக்கே இந்தத் தேர்தலில் பெரும் லாபம் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

27 இடம் கிடைக்கும்

27 இடம் கிடைக்கும்

அதிமுகவுக்கு தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 27 இடம் வரை கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தனித்துப் போட்டியிட்டு சாதனை

தனித்துப் போட்டியிட்டு சாதனை

இந்தத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. தமிழகத்தில் 39 இடங்களிலும், புதுச்சேரியிலும் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலை விட 18 அதிகம்

கடந்த தேர்தலை விட 18 அதிகம்

கடந்த 2009ல் நடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட அதிமுக இந்த தேர்தலில் 18 இடங்களைக் கூடுதலாகப் பெறுமாம்.

திமுகவுக்கு 10தான்

திமுகவுக்கு 10தான்

மறுபக்கம் கடந்த தேர்தலில் 18 இடங்களில் வென்ற திமுகவுக்கு இந்த முறை அதிகபட்சம் 10 இடங்கள்தான் கிடைக்குமாம்.

பாஜக - தேமுதிகவுக்கு கேவலமான தோல்வி

பாஜக - தேமுதிகவுக்கு கேவலமான தோல்வி

பெரும் பேச்சாக பேசிக் கொண்டிருக்கும் பாஜக, தேமுதிக, பாமக கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் சம்மட்டி அடி கொடுக்கிறார்கள் மக்கள்.

அந்த இரண்டும் யாருக்கோ...

அந்த இரண்டும் யாருக்கோ...

இந்த இரண்டில் ஒரு வெற்றி வைகோவாக இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. இன்னொரு இடத்தில் வெல்லப் போவது யார் என்பதுதான் சஸ்பென்ஸாக உள்ளது.

English summary
According to NDTV opinion poll, it shows powerful regional leaders like J Jayalalithaa and Mamata Banerjee holding their own in the states that they rule. Jayalalithaa's AIADMK is set to win 27 of the 39 seats in Tamil Nadu. The DMK, which had fought in partnership with the Congress in 2009, will lose big, the survey shows. The BJP's attempt at getting a toehold in the state by partnering the DMDK is unlikely to amount to much.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X