பட்டியலில் இல்லை: ஜெ. மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவில்லை
பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வராது என்று கூறப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பு அளித்தது. இதையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட அவர்களின் ஜாமீன் மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
இதையடுத்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். இந்நிலையில் அவர்களின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் பட்டியலில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு குறித்த வழக்கு இல்லை.
அதனால் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வராது என்று தெரிகிறது. மேலும் அந்த வழக்கு இந்த வாரத்தில் விசாரணைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications