For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 மணிக்கு கோர்ட் வந்தார் குமாரசாமி.. வழக்கில் தொடர்புள்ள வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: காலை 10 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு வந்து விட்டார் நீதிபதி குமாரசாமி. கோர்ட் ஹாலுக்குள் அவர் 11 மணிக்கு வர உள்ளார்.

ஜெயலலிதா வழக்கில் காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு வந்தார் நீதிபதி குமாரசாமி. நேராக தனது அறைக்கு சென்று சில ஆயத்த பணிகளில் ஈடுபட்டார்.

Jaya verdict: Argument breaks out between lawyers and police

காலை 11 மணிக்கு அவர் கோர்ட் ஹாலுக்குள் வருவார். இதனிடையே, குற்றவாளிகள் தரப்பு மற்றும் திமுக தரப்பு வக்கீல்களை மட்டுமே கோர்ட் ஹாலுக்குள் அனுமதிக்க முடியும் என்று போலீசார் கூறியதால் பிற வக்கீல்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோர்ட் வளாகத்தில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. கோர்ட் ஹாலுக்குள் அதிமுக தரப்பு வக்கீல்கள்,
அசோகன், குமார், செந்தில், மணிசங்கர் உட்பட 7 வக்கீல்கள் அனுமதிக்கப்பட்டனர். திமுக தரப்பில் தாமரை செல்வன், பாலாஜி சிங், நடேசன் ஆகியோர் கோர்ட் ஹாலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மீடியாக்காரர்களை உள்ளே அனுமதிப்பதா வேண்டாமா என்பதுகுறித்து சரியான முடிவை அறிவிக்காமல் காவல்துறை காலம் தாழ்த்திவந்தனர். ஆனால் ஒருவழியாக காலை 10.30 மணிக்கு உள்ளே அனுமதித்தனர். சுமார் 500 பத்திரிகையாளர்கள் அங்கு உள்ளனர்.

English summary
Argument breaks out between lawyers and police. Police say only those who have filed a vakalath will be permitted inside.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X