பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை காட்டவில்லை: போலீஸ் அதிகாரி பேட்டி
பெங்களூர்: சிறைச்சாலையில் ஜெயலலிதா ஆரோக்கியமாக உள்ளார், அவருக்கு எந்த சிறப்பு சலுகையும் காட்டப்படவில்லை என்று பெங்களூர் மத்திய சிறைச்சாலை டிஐஜி ஜெய்சிம்ஹா தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறைச்சாலைக்குள் எப்படி உள்ளார் என்ற விவரம், சிறைத்துறை வட்டாரங்கள் மூலமாக மீடியாக்களுக்கு கசிந்து கொண்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக யாரும் பேட்டியளிக்கவில்லை.
இந்நிலையில் முதன்முறையாக, சிறைத்துறை டிஐஜி ஜெய்சிம்ஹா இன்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: சிறையில் ஜெயலலிதா மிகுந்த ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு அவ்வப்போது டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தி உடல் நிலையை கண்காணித்தபடி உள்ளனர்.
சிறையில் தயாரிக்கப்படும் சாப்பாடுதான் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரம், டாக்டர்கள் என்ன பரிந்துரைத்துள்ளார்களோ, அந்த சாப்பாட்டைதான் ஜெயலலிதாவுக்கு அளித்துவருகிறோம்.
ஜெயலலிதா சிறையில் இதுவரை யாரையும் சந்திக்கவில்லை. அதேபோல அவருக்கு வெளியே எங்கும் சிகிச்சை கொடுக்கவும் இல்லை. அனைத்து மருத்துவ வசதிகளும் சிறைக்குள்ளேயே அளிக்கப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு சிறைக்குள் ஏசி போன்ற நவீன வசதிகள் அளிக்கப்படவில்லை. சாதாரண அறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் என்பதற்காக சிறப்பு சலுகை எதுவும் சிறைக்குள் காட்டப்படவில்லை. அதே நேரம் ஜெயலலிதாவுக்கு சிறை கைதிகள் அணியும் வெள்ளை சேலை வழங்கவில்லை. அவர் வழக்கம்போல வண்ண சேலைகள் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications