ஜெயலலிதா பாதுகாப்பு... அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவித்த பெங்களூர் போலீஸ் கமிஷனர்
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் மத்திய சிறை பாதுகாப்பை இன்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் நேரடியாக ஆய்வு செய்தார். ஜெயலலிதா விமானத்தில் சென்னை புறப்பட்ட பிறகு அவர் கூறியுள்ளதாவது: கடந்த மாதம் 27ம்தேதி முதல் இன்றுவரை ஜெயலலிதா பாதுகாப்புக்காக உழைத்த பெங்களூர் போலீசாருக்கு நன்றி. மீடியாக்கள், பெங்களூர்வாசிகள், தமிழகத்தில் இருந்து வந்திருந்த மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல் அவர் விமானத்தில் பயணப்பட்டது வரை எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications