சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை! ஜெ. தரப்பு வாதிட வாய்ப்பு
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஜெயலலிதா தரப்பு தங்கள் வாதத்தை முன்வைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை, கர்நாடக ஹைகோர்ட் ரத்து செய்து அவரை நிரபராதி என கூறி விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், கர்நாடகா, அன்பழகன் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
முதலில் கர்நாடக தரப்பு வாதங்களை சமர்ப்பித்தது. தாவே, ஆச்சாரியா போன்ற மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக ஹைகோர்ட்டில் வழங்கிய தீர்ப்பில் பிழை இருப்பதாக வாதாடினர்.
நமது எம்.ஜி.ஆர் சந்தா வருவாய் குறித்தும் பல ஐயப்பாடுகளை எழுப்பினர். ஜெயலலிதா பல்வேறு முறைகேடுகளை செய்து சொத்துக்குவிப்பை மறைத்ததாக ஆச்சாரியா வாதிட்டார்.
ஆச்சாரியா வாதம் ஏறத்தாழ நிறைவுற்ற நிலையில், வழக்கு மார்ச் 29ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஆச்சாரியா சில சந்தேகங்களை முன்வைத்து வாதிட வாய்ப்புள்ளது. இதையடுத்து இன்றையே ஜெயலலிதா தரப்பு வாதம் முன்வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
அன்பழகன் தரப்புக்கு ஏதேனும், சந்தேகங்கள் இருப்பின் அதை தெரியப்படுத்த மட்டும் வாய்ப்பு தரப்படும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications