உங்க பர்சனாலிட்டியே சரியில்லையே: ஸ்மிருதி இரானியை நிராகரித்த ஜெட் ஏர்வேஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தனது பர்சனாலிட்டி சரியில்லை என்று கூறி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனக்கு வேலை அளிக்க மறுத்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில்,

நான் ஒரு காலத்தில் ஏர் ஹோஸ்டஸ் பணிக்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனக்கு நல்ல பர்சனாலிட்டி இல்லை என்று கூறி எனக்கு வேலை அளிக்க மறுத்துவிட்டார்கள்.
அவர்கள் நிராகரித்ததற்கு நன்றி. அதன் பிறகு எனக்கு மெக்டொனால்ட்ஸில் வேலை கிடைத்தது. பின்னர் நடந்தது எல்லாம் வரலாறு என்றார்.
ஜெட் ஏர்வேஸ் அதிகாரி ஒருவருக்கு விருது வழங்கிய கையோடு தான் தனது வேலை குறித்து ஸ்மிருதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications