ஜார்க்கண்ட்டில் புதிய பரபரப்பு..பாஜகவை விட்டு 3 மாஜி எம்.எல்.ஏக்கள், சீனியர் 'தலை'கள் கிரேட் எஸ்கேப்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் 3 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் பாஜகவில் இருந்து விலகி முதல்வர் ஹேமந்த் சோரன் முன்னிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்துள்ளனர். 3 முறை பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்த கேதார் ஹஸ்ரா, பாஜகவின் கூட்டணி கட்சியான ஏஜேஎஸ்யூவின் மூத்த தலைவர் உமாகாந்த் ரஜாக் ஆகியோரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி, எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பாஜக மீது அதிருப்தி அடைந்த அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏக்கள், சீனியர் தலைவர்கள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்து வருகின்றனர். முதல்வர் ஹேமந்த் சோரன் முன்னிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்த லூயிஸ் மராண்டி, 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஹேமந்த் சோரனை 4,914 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர். 2019-ம் ஆண்டு தேர்தலில் லூயிஸ் மராண்டியை 13,188 வாக்குகள் வித்தியாசத்தில் ஹேமந்த் சோரன் தோற்கடித்தார். இருந்த போதும் தும்கா தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய 2020-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலிலும் லூயிஸ் மராண்டி தோற்கடிக்கப்பட்டார்.
ஹேமந்த் சோரனை தேர்தல் களத்தில் வீழ்த்தியவரான லூயிஸ் மராண்டி தற்போது பாஜகவை விட்டு ஹேமந்த் சோரனிடமே அடைக்கலமாகி இருப்பது முக்கியமான நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் சாரங்கியும் தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலிலும் பாஜக தலைவர்கள் பலர் காங்கிரஸுக்கு தாவி இருந்தனர். ஆனாலும் ஹரியானா தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியது. காங்கிரஸின் மிதமிஞ்சிய நம்பிக்கையால் ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications