ஜார்க்கண்டில் இமாலய வெற்றி பெற்ற "இந்தியா கூட்டணி.." பாஜகவுக்கு விழுந்த பெரிய அடி!
ராஞ்சி: ஜார்கண்ட்டில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி பாஜகவுக்கு ஷாக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி 81 தொகுதிகளில் 56 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 41 தொகுதிகள் தான் என்கிற போது அதையும் தாண்டி 56 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
தபால் வாக்குகளில் பாஜக கூட்டணியே முன்னிலை பெற்றது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 56 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

81 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக கடந்த 13 ஆம் தேதி 43 தொகுதிகளிலும், 2 ஆம் கட்டமாக 20 ஆம் தேதி 38 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பாஜக கூட்டணியே முன்னிலை பெற்றது. அதன்பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. இதில் தொடக்கம் முதலே இரு கூட்டணிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன. தற்போது நிலவரப்படி மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டது.
பாஜக கூட்டணி 24 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதில்12 தொகுதிகளில் வெற்றி உறுதியாகியுள்ளது. இந்தியா கூட்டணியில், ஜேஎம்எம் 34 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
பெரும்பான்மைக்கு 41 தொகுதிகள் தேவை என்கிற நிலையில், இந்தியா கூட்டணி 56 தொகுதிகளில் தற்போது முன்னிலையில் உள்ளதால், காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ஜார்க்கண்டில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 41 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். தற்போது ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஜார்க்கண்டை பொறுத்தவரை தற்போது முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். ஆட்சியை தக்க வைக்க ஹேமந்த் சோரன் உள்பட இந்தியா கூட்டணி கட்சிகளும், ஆட்சியை மீண்டும் பிடிக்க பாஜக கூட்டணியும் வியூகம் வகுத்துள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் எனக் கூறியுள்ளன. இதனால், பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அவர்களது கனவு சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.
கடந்த தேர்தலில் எப்படி?:
கடந்த2019 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா: 30
காங்கிரஸ்: 16
ராஷ்ட்ரிய ஜனதா தளம்: 01
பாஜக கூட்டணி:
பாஜக: 25
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா: 3
பிற கட்சிகள்: 6 -ல் வெற்றி பெற்றன.
இந்தியா கூட்டணி:
இந்த தேர்தலை பொறுத்தவரை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் அக்கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. 2 தொகுதிகளில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளுமே போட்டியிட்டுள்ளன.
பாஜக கூட்டணி:
பாஜக கூட்டணியில் அந்த கட்சி 68 தொகுதிகளிலும், அகில இந்திய ஜார்கண்ட் மாணவர்கள் சங்கம் 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதளம் 2 தொகுதிகளிலும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இதர இடங்களில் பிற கட்சிகள் போட்டியிடுகின்றன. ஹேமந்த் சோரன் பர்கைத் தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிடுகிறார். பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தன்வர் தொகுதியில் நிற்கிறார்.
முக்கிய வேட்பாளர்கள்:
சம்பாய் சோரன் (பாஜக), மஹுவா மஜி, பன்னா குப்தா (காங்கிரஸ்), கீதா குப்தா (பாஜக), அஜோய் குமார் (காங்கிரஸ்), சுக்ரம் ஓரோன் (ஜே.எம்.எம்), ஹேமந்த் சோரன் (ஜேஎம்எம்), பபுலா மராண்டி (பாஜக), கல்பனா சோரன் (ஜேஎம்எம்), சுனில் சோரன் (பாஜக) உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications