ஜார்க்கண்ட்: 4 அமைச்சர்கள் உட்பட 15 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் கொடுத்த காங்கிரஸ்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நள்ளிரவில் வெளியிட்டது. 21 வேட்பாளர்களைக் கொண்ட இந்த முதல் கட்ட பட்டியலில் 4 அமைச்சர்கள் உட்பட 15 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது காங்கிரஸ். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 29 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சியான பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஜேடியூ, எல்ஜேபி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ்- ஆர்ஜேடி-இடதுசாரிகள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 31 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 27 முதல் 29 இடங்கள்தான் தர முடியும் என கறாராக சொல்லிவிட்டது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. இதேபோல ஆர்ஜேடியும் கணிசமான இடங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் நள்ளிரவில் அறிவித்தது. இந்த 21 பேரில் 4 அமைச்சர்கள் உட்பட 15 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் இடம் பெற்றுள்ளனர். பொதுவாக சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அதிருப்தி அலையால் தோல்வியையே அதிகம் தழுவக் கூடிய வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஆனாலும் காங்கிரஸ் கட்சியோ சிட்டிங் எம்.எல்.ஏ.க்களை முழுமையாக நம்பி மீண்டும் தேர்தல் களத்துக்கு அனுப்பி இருக்கிறது. அதேநேரத்தில் பாஜகவோ பெரும்பாலான மாநில தேர்தல்களில் சிட்டிங் எம்.எல்.ஏக்க்களுக்கு சீட் தர மறுத்து புது முகங்களை களமிறக்கி வெற்றியை அறுவடை செய்வதை வியூகமாக வைத்திருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications