ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா.. மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் வெளியே வந்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்.
காங்கிரஸ் தலைமையிலனா இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் அம்மாநில முதல்வராக இருந்தார். ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என புகார் எழுந்தது.

அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி அதிரடியாக கைது செய்தது. ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட உள்ளதை அறிந்து உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னரே அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. கடந்த ஆறு மாதங்களாக ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்த கையோடு, தான் வகித்த முதல்வர் பதவியை கட்சியின் மூத்த தலைவா் சாம்பாய் சோரன் அளித்துவிட்டு சென்றார்.இதையடுத்து ஜாா்க்கண்ட் புதிய முதல்வராக சாம்பாய் சோரன் பதவியேற்றார். சில மாதங்களுக்குப் பிறகு ஜார்க்கண்ட் நீதிமன்றம் சோரனுக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் பிணையில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார் இதற்காக முதல்வர் சாம்பாய் சோரன் வீட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களின் குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் ஹேமந்த் சோரன். இதனிடையே சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் இன்று மாலை அளித்தார்.
அப்போது சாம்பாய் சோரனுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது ஹேமந்த் சோரன் தன்னை ஆட்சியமைக்க அழைக்கும் படி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து உரிமை கோரினார்.. அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் விரைவில் ஹேமந்த் சோரனை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றால், கடந்த 2000 நவம்பரில் பீகாரில் இருந்து பிரிக்கப்பட்ட ஜார்க்கண்டின் 13வது முதல்வராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications