ஜார்க்கண்ட்டில் கடும் போட்டி.. நூலிழையில் ஆட்சியை பிடிக்கும் பாஜக! சாணக்யா எக்ஸிட் போல்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இதற்கிடையே சாணக்யா ( Chanakya strategies)நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அங்குப் போட்டி கடுமையாக இருந்தாலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என சாணக்யா எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.

இந்தி ஹார்ட்லேண்டில் முக்கிய மாநிலமாக இருக்கும் ஜார்க்கண்டில் இப்போது ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார். ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி வரிசையில் பாஜக இருக்கிறது.

exit poll 2024 jharkhand exit polls 2024

ஜார்க்கண்டில் எப்படியாவது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் அங்கு ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி உள்ளது. மறுபுறம் இந்தி ஹார்ட்லேண்ட் மாநிலமான ஜார்கண்டில் வெற்றிக்கொடியை நாட்ட வேண்டும் என்பதில் பாஜகவும் முனைப்பாக இருக்கிறது.

ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 சீட்கள் இறுக்கும் நிலையில், கடந்த நவ. 13ம் தேதி 43 தொகுதிகள், இன்று 38 தொகுதிகள் என்று இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அங்கு சில இடங்களில் மாவோயிஸ்ட்கள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்து இருந்தனர். இருப்பினும், அதையும் தாண்டி அங்கு மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். வரும் சனிக்கிழமை நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதன்படி சாணக்யா ஜார்கண்டில் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அங்கு மொத்தம் 81 சீட்கள் இருக்கும் நிலையில், பாஜகவின் என்டிஏ கூட்டணி 45- 50 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. மறுபுறம் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி 35-38 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதாவது அங்கு இந்த முறை கடும் போட்டி நிலவும் என்ற போதிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதற்கு முன்பு கடந்த 2019ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஹேமந்த் சோரனின் ஜேஎம்எம் கட்சி அதிகபட்சமாக 30 சீட்களில் வென்றது. காங்கிரஸ் 16 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சியை அமைத்தது.

ஆனால், இந்த முறை ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணியால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றே சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி அதிகபட்சமாக 38ல் வெல்ல வாய்ப்பு இருந்தாலும் அது பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க போதுமானதாக இருக்காது என்றே சணக்யா எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+