ஜார்க்கண்ட் கோடீஸ்வர வேட்பாளர்கள்.. பாஜகவை ஓவர்டேக் செய்த காங்கிரஸ்! அடுத்தது எந்த கட்சி தெரியுமா?
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் முதலாம் கட்ட தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறும் நிலையில், அங்குக் களத்தில் உள்ள வேட்பாளர்களில் பணக்கார வேட்பாளர்கள் யார், ஏழ்மையான வேட்பாளர்கள் யார் என்பது குறித்து தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. மேலும், கட்சி ரீதியாக எந்த கட்சியில் கோடீஸ்வரர்களுக்கு அதிகம் வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்களும் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட்டில் இப்போது ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்குச் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்த்தரப்பில் பாஜக களத்தில் உள்ளது. இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஜார்கண்ட் முதலாம் கட்ட தேர்தலில் மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களின் சொத்து மதிப்புகளை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வு செய்து, யார் பணக்கார வேட்பாளர்கள்.. எந்தக் கட்சியில் அதிக கோடீஸ்வரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
பணக்கார வேட்பாளர்கள்: அதன்படி மொத்தமுள்ள 682 வேட்பாளர்களில் 34% பேர், அதாவது 235 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். கட்சி வாரியாக பார்க்கும் போது அதிகபட்சமாகக் காங்கிரஸ் வேட்பாளர்களில் 94% பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். ஜேஎம்எம் கட்சியைப் பொறுத்தவரை 78% பேரும், ஆர்ஜேடி கட்சியில் 80% பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதேபோல பாஜக சார்பில் போட்டியிடுவோரில் 83% பேர் கோடீஸ்வரர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சராசரியாகப் பார்க்கும் போது வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 2.16 கோடியாக இருக்கிறது.
கிழக்கு சிங்பூமில் உள்ள பொட்கா தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் கண்டோமணி பூமிஜ் தான் ஜார்க்கண்ட் முதலாம் கட்ட தேர்தலில் பணக்கார வேட்பாளர் ஆவர். அவரது சொத்து மதிப்பு 80 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. தொடர்ந்து டல்டோங்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணா நந்த் திரிபாதி, ராஞ்சியில் சுயேச்சையாகக் களமிறங்கும் ஆயுஷ் ரஞ்சன் ஆகியோரின் சொத்து மதிப்பு ரூ.70 கோடிக்கு மேல் இருக்கிறது.
எளிய பின்புலம்: அதேபோல ஏழ்மையான வேட்பாளர்கள் என்றால் அது ஜேஎல்கேஎம் கட்சி சார்பில் சிசாய் (கும்லா) தொகுதியில் போட்டியிடும் சுஷில் டோப்னோ.. அவரது சொத்து மதிப்பு ரூ. 7,000 மட்டுமே.. அவரை தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களாகக் களமிறங்கும் பசந்த் குமார் துங்டுங் மற்றும் ரோஷுன் சுண்டி ஆகியோர் முறையே ரூ.10,000 மற்றும் ரூ.15,000 சொத்துக்களை மட்டுமே வைத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கல்வி தகுதி என்ன: கல்வித் தகுதி என்று பார்க்கும் போது சுமார் 45% வேட்பாளர்கள் 5 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்களாக உள்ளனர். மறுபுறம் 51% வேட்பாளர்கள் பட்டப்படிப்பு படித்தவர்களாக உள்ளனர். மேலும், களத்தில் உள்ள வேட்பாளர்களில் 11% பேர், அதாவது 73 பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமாக 81 இடங்கள் உள்ளன. எந்தக் கட்சிக்கு 41 இடங்கள் கிடைக்கிறதோ.. அந்தக் கட்சியே அங்கு ஆட்சியை அமைக்கும். ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்த முறை நவ. 13 மற்றும் நவ. 20 என்று இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவ. 23ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications