நண்பருடன் பைக் ரைட் போன இளம்பெண்! கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 10 பேர்.. மிரண்டுபோன கிராமம்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறிய கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கூட்டு பாலத்கார சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. சில குறிப்பிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
பாதுகாப்பிற்கு யாரையாவது துணைக்கு அழைத்துச் சென்றாலும், அவர்களையும் தாக்கி பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறியுள்ளன. இது பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஜார்கண்ட்
ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 26 வயது பெண் பொறியாளர் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அடையாளம் தெரியாத 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் 20இல் நடந்ததாக கூறப்படுகிறது.

கூட்டு பலாத்காரம்
பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் போலீசார் கூறுகையில், "அந்தப் பெண் தனது நண்பருடன் சாலையோரம் நின்று பேசிக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த 10 பேர் திடீரென அவர்கள் தாக்கி உள்ளனர். பைக்கில் வந்த அந்த கேங் பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.

விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் அந்த பைக் கேங் நபர்களைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. அந்த பெண்ணுக்கு இப்போது போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் அங்குள்ள டெக்ராஹட்டு பகுதியில் நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

என்ன நடந்தது
பாதிக்கப்பட்ட அந்த பெண் அங்கே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆவார். அவர் இப்போது வீட்டில் இருந்து பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் பெண் கடந்த அக்.20ஆம் தேதி மாலை 6 மணியளவில் தனது நண்பருடன் டெக்ராஹட்டு விமான தளத்திற்கு பைக்கில் சென்று உள்ளார். அப்போது தான் அங்கு வந்த 10 இளைஞர்கள் அவர்களைத் தாக்கி உள்ளனர்.

போலீசார்
அவருடன் வந்த நண்பர் காயமடைந்த நிலையில், இந்த பெண்ணை அருகே உள்ள புதருக்கு இழுத்துச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாகப் புகார் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நடவடிக்கை
முதற்கட்டமாக அருகே இருந்த கிராமங்களில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித் திரியும் நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் கொடுத்து வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications