குஜராத்தின் இளம் நாயகன்.. பாஜகவிற்கு கிலி ஏற்படுத்தும் பெயர்.. யார் இந்த ஜிக்னேஷ் மேவானி?
குஜராத்தின் வட்காம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி முக்கிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார்.
Recommended Video

அஹமதாபாத்: குஜராத்தின் வட்காம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி முக்கிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட இவர் பல்லாயிரம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.
மிகவும் இளம் வயது அரசியல்வாதியாக உருவெடுத்து இருக்கும் இவர் பாஜக கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இனி குஜராத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது. இனி குஜராத்தில் எதிர்காலத்தில் நடக்க போகும் பல முக்கிய அரசியல் மாற்றங்களுக்கு இவரும் காரணமாக இருப்பார்.
இந்த தேர்தல்தான் இவருடைய முதல் தேர்தல் என்றாலும் மக்கள் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்து இருக்கின்றனர்.

ஜிக்னேஷ் யார்
தற்போது முக்கிய தலைவராக உருவாகி இருக்கும் இவர் 35 வயது மட்டுமே நிரம்பியவர். சட்டம் படித்த இவர் 2008ம் ஆண்டில் இருந்து தலித் மக்களின் உரிமைக்காக போராட்டங்கள் நடந்தி வருகிறார். டெல்லியில் ரோஹித் வெமுலா மரணம் அடைந்த போது இவர் நிறைய போராட்டங்கள் நடத்தினார். அந்த போராட்டத்தில் இருந்தே அரசியல் வெளிச்சம் இவர் மீது பட ஆரம்பித்தது.

கொலை
பாஜக தங்கள் அரசியல் லாபத்திற்காக கொண்டு வந்த பசு வதை தடை சட்டம் தான் இவரையும் வளர்த்தது. குஜராத்தில் பசு இறைச்சி சாப்பிட்டதாக அடிக்கடி சிலர் கொல்லப்படும் சம்பவம் நடந்தேறும். அதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார். உனாவில் பசு வதை பெயரில் நடந்த மனித கொலைக்கு எதிராக 20,000 தலித் மக்களை கூட்டி பெரிய போராட்டம் நடத்தினார்.

கொடியை ஏற்றினார்
இந்த போராட்டத்தை பெரிய பேரணியாக மாற்றி உனாவில் கொடி ஏற்ற முடிவு செய்தார். இவர்தான் போராட்ட கொடியை ஏற்றுவார் என்று எல்லோரும் நினைத்த போது ரோஹித் வெமுலாவின் அம்மாவை கூப்பிட்டு கொடி ஏற்ற வைத்தார். இந்த நிகழ்விற்கு பின் அவர் இந்தியா முழுக்க பேசப்பட்டார். இதன்பின் தான் அவர் குஜராத்தின் முக்கிய தலைவர் ஆனார்.

வெற்றி பெறுவார்
குஜராத்தின் வட்காம் தொகுதியில் இவர் எப்படியும் வெற்றிபெற்று விடுவார் என்றே கூறுகிறார்கள். இப்போதே அவர் பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார். இதனால் இவர் எதிர்காலத்தில் குஜராத்தின் முக்கிய தலைவர் ஆவார் எனப்படுகிறது. இப்போதே பாஜவிற்கு பெரும் போட்டியாக இவர் உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications