திருமணம் செய்ய மறுத்த காதலனை இளம்பெண் என்ன செய்தார் தெரியுமா?

வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலனின் மர்ம உறுப்பை இளம்பெண் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

போபால்: தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய துணிந்த முன்னாள் காதலனின் பிறப்புறுப்பை துண்டித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்தியப்பிரதேசம் மாநிலம், சித்தி மாவட்டத்தில் உள்ள நவ்கவான் (தர்ஷன் சிங்) கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

Jilted lady bobbitises lover for planning to marry another

இவர்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இவர்களது காதல் ஊருக்கும் தெரியாமல், வீட்டுக்கும் தெரியாமல் மூன்றாண்டுகளாக தொடர்ந்திருக்கிறது. இந்நிலையில், தனது காதலன் அவரது ஜாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக அந்த இளம்பெண்ணுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடந்த 23-ம் தேதி இரவு தாங்கள் எப்போதும் ரகசியமாக சந்திக்கும் இடத்துக்கு அந்த வாலிபரை வரவழைத்த அந்த இளம்பெண், கடைசியாக உங்களுடன் உடலுறவு வைத்துகொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தியுள்ளார்.

அந்த இளைஞரும் அதற்கு இணங்கி, உச்சகட்ட இன்பத்தை அனுபவதித்துக்கொண்டிருந்த போது, சற்றும் எதிர்பாராமல் மறைத்து வைத்திருந்த கதிர் அரிவாளால் காதலனின் பிறப்புறுப்பை வெட்டி துண்டித்துள்ளார் அந்த இளம்பெண். இதைத் தொடர்ந்து ஓட்டம் பிடித்து வீட்டிற்குச் சென்ற இளைஞர் யாருக்கும் தெரியாமல் அமைதியாக இருந்துள்ளார். எனினும், அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு வலி பொறுக்காமல் துடிதுடித்துள்ளார்.

இதையடுத்து, அந்த இளைஞரை அவரது பெற்றோர் சித்தி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். முதல்கட்ட சிகிச்சைக்கு பின்னர் ரேவாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது ஜபல்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பயன்படுத்தப்பட்ட கதிர் அரிவாள் மற்றும், வெட்டப்பட்ட பகுதியை போலீசார் மீட்டதாக இவ்வழக்கின் விசாரணை அதிகாரி அணில் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

இளம் பெண்ணுக்கும், இளைஞருக்கும் ஏற்கனவே கோவிலில் வைத்து ரகசிய திருமணம் நடந்ததாகவும், வேறு ஜாதி என்பதால் தங்களது காதலை ஏற்க பெற்றோர்கள் மறுத்து காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயம் செய்த ஆத்திரத்தில் இதனை செய்ததாக இளம்பெண் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+