டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை
டெல்லி: இந்தியா வந்துள்ள சீனா அதிபர் ஜி ஜின்பிங்குடன் டெல்லியில் பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப் பயணமாக நேற்று குஜராத்தின் அகமதாபாத் வந்தடைந்தார் ஜின்பிங். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர் ஹோட்டல் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியை ஜின்பிங் சந்தித்துப் பேசினார். அப்போது குஜராத் மாநிலத்துக்கும் சீனாவுக்கும் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

பின்னர் இருவரும் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சபர்மதி ஆற்றங்கரையோரப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இருவரும் டெல்லி வந்தடைந்தனர். டெல்லியில் இன்று காலை ஜனாதிபதி மாளிகையின் ஜின்பிங்குக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டது. ஜின்பிங்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றார்.
அங்கு ஜின்பிங்குக்கு தனது அமைச்சரவை சகாக்களை மோடி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஜின்பிங் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் சீனா அதிபர் ஜின்பிங் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications