நீங்க ஜோடி சேர நாங்கதான் காரணம்.. வோடபோன்-ஐடியா இணைப்பை கிண்டல் செய்த ஜியோ!
ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்பை ஜியோ நிறுவனம் டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளது.
Recommended Video

டெல்லி: ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்பை ஜியோ நிறுவனம் டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளது.
ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நேற்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின் இந்த இணைப்பு சாத்தியம் ஆகியுள்ளது. இணைப்பு காரணமாக நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக மாறியுள்ளது.
|
ஐடியா டிவிட்
இந்த நிலையில் ஐடியா நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் இந்த அழகான டிவிட் வெளியாகி இருந்தது. ''ஹே வோடபோன் உனக்கு தெரியுமா, எல்லோரும் நம்மை பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்'' என்று திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் டிவிட் செய்வது போல டிவிட் செய்திருந்தனர்.
|
வோடபோன் டிவிட்
இதையடுத்த்து வோடபோன் அதற்கு பதில் அளித்து டிவிட் செய்தது. அதில், ஆமாம் ஐடியா. நாம் இப்போது அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம், என்று கூறியுள்ளது.
|
ஜியோ கிண்டல்
இதற்கு ஜியோ நிறுவனம் அளித்த பதில்தான் வைரல் ஆகியுள்ளது. அதில், கடந்த 2016ல் இருந்தே நாங்கள் மக்களை இணைத்து வருகிறோம் என்றுள்ளனர். அதாவது வோடபோன் ஐடியா இணைப்பிற்கு தாங்கள்தான் காரணம் என்று ஜியோ கூறியுள்ளது.

ஜியோவா காரணம்
2016 இறுதியில் ஜியோ நிறுவனம் பயன்பாட்டிற்கு வந்தது. அப்போதில் இருந்தே மற்ற நிறுவனங்களுக்கு பயனாளர்கள் குறைத்து போனார்கள். இதனால் ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிலையில் இழப்பை சமாளிக்கும் வகையில் வோடபோன் மற்றும் ஐடியா இணைந்துள்ளது.
|
ஏர்டெல் வாழ்த்து
இந்த நிலையில் வோடபோன் ஐடியா இணைப்பிற்கு ஏர்டெல் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், வாழ்த்துகள் மக்களே. வரவேற்கிறோம் உங்களை. இது எப்படி இருக்கும் என்று எங்களால் உணர முடிகிறது, என்றுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications