மானம் போகுது: பாலியல் புகார்களை வெளியே சொல்லாதீர்கள்: மாணவர்களுக்கு ஜே.என்.யு. கோரிக்கை
டெல்லி: டெல்லியில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து அதிக அளவில் பாலியல் புகார்கள் அளிக்கப்படுவதால் அது குறித்து வெளியே தெரிவிக்கக் கூடாது என்று மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து ஏராளமான பாலியல் புகார்கள் வருகின்றது. பிரபல பல்கலைக்கழகத்தில் இருந்து அதிக அளவில் பாலியல் புகார்கள் வருவதால் பலரும் அதை கண்டபடி விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழகம் மாணவ, மாணவியருக்காக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாலியல் புகார்கள் குறித்து யாரும் வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சமூகத்தை கேட்டுக் கொள்கிறோம். பாலியல் புகார்கள் குறித்து வெளியே தெரிவிப்பதால் நமக்கு தான் மோசமான சூழல் உருவாகிறது. அரிசயல் ஆதாயத்திற்காக பாலியல் புகார்கள் குறித்த விபரங்களை யாராவது வெளியிடுவது சரி அல்ல.
பாலியல் புகார்கள் அளிக்க விரும்புவோர் அதை பல்கலைக்கழக குழுவிடம் தான் அளிக்க வேண்டும். மாறாக வெளியே தெரிவித்தால் அது பாதிக்கப்பட்டவர்களின் துயரை அதிகரிக்கத் தான் செய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-2014ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 25 பாலியல் புகார்கள் எழுந்துள்ளன என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்த வாரம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள 16 கல்வி நிறுவனங்களில் பதிவான 101 பாலியல் புகார்களில் 50 சதீவதம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பதிவானது தான்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications