பிஏ வேலைக்கு ஆள் எடுப்பதாக மோசடி.. குயிக்கர் வெப்சைட்டில் வேலை தேடி காமுகனிடம் சிக்கிய பெண்
பெங்களூர்: குயிக்கர் இணையதளம் மூலம், உதவியாளர் வேலைக்கு விண்ணப்பத்த ஒரு பெண், காமுகனிடம் சிக்கிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார்.
இந்நிதையில் சமீபத்தில் குயிக்கர் என்ற இணையதளப்பக்கத்தில், பெங்களூரில் தனிப்பட்ட உதவியாளர் (பிஏ) பணியிடம் ஒன்று காலியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததை அறிந்தார்.

பெங்களூரில் கம்பெனி
இதையடுத்து குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் உரிமையாளர் என்று கூறி விளம்பரம் செய்திருந்த சுதீந்திரா (42) என்பவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, வேலை குறித்து கேட்டறிந்தார். பெங்களூரில் தனக்கு நிறுவனம் இருப்பதாகவும், அங்கு பிஏ வேலைக்கு சேர வேண்டும் என்றும் சுதீந்திர கூறியுள்ளார்.

இரட்டை அர்த்த மெசேஜ்கள்
இதன்பிறகு, அவ்வப்போது ரேஷ்மா செல்போன் எண்ணுக்கு, மெசேஜ் அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார் சுதீந்திரா. பணி நிமித்தமாக அவ்வப்போது வெளியே போக வேண்டியிருக்கும். வெளியூர்களில் என்னுடன் சேர்ந்து தங்க வேண்டிவரும் என்பது போன்ற நிபந்தனைகளை மெசேஜ் மூலம் கூறியுள்ளார்.

சந்தேகம்
சுதீந்திரா நடவடிக்கையிலும், அவரது குறிக்கோளிலும் சந்தேகமடைந்த ரேஷ்மா, தனது நண்பர், ஆதித்யாவிடம் இதுபற்றி கூறியுள்ளார். ஆண்களின் உளவியல் புரிந்த ஆதித்யா, சுதீந்திரா மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரை பொறி வைத்து பிடிப்போம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

மீட் வித் காபி
இதையடுத்து சுதீந்திரா இன்டர்வியூ நடத்துவதாக குறிப்பிட்ட நாளில், ரேஷ்மா அவர் கூறிய இடத்துக்கு சென்றார். இந்திராநகர் பகுதியுள்ள பிரபல நிறுவனத்தின் காபி ஷாப்பில் வைத்துதான் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆபாச கமெண்ட்
ரேஷ்மாவை பார்த்ததுமே, நேராக பாயிண்டுக்கு வந்துவிட்டார் சுதீந்திரா. அவரது அங்க அளவுகள் பற்றி சிலாகித்து பேசி, ரேஷ்மாவை தர்ம சங்கடப்படுத்தியுள்ளார். மேலும், பணி நிமித்தமாக ஊட்டி, மைசூர் செல்ல வேண்டிவரும். அப்போது என்னுடன் ஓட்டலில் தங்க வேண்டும், நான் என்ன கேட்டாலும் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

வீடியோ பதிவு
இந்த உரையாடல்களை எல்லாம், ரேஷ்மா தன்னிடமிருந்த கேமராவில் வீடியோவாக பதிவு செய்துகொண்டிருந்ததை சுதீந்திரா அறியவில்லை. இந்நிலையில், ரேஷ்மாவிடமிருந்து, தகவல் வந்ததும், மறைந்திருந்த இடத்தில் இருந்து ஓடிவந்த ஆதித்யா, சுதீந்திராவை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். ஆதாரத்தை உறுதி செய்த போலீசார், பாலியல் துன்புறுத்தல் பிரிவில் சுதீந்திரா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலி எம்.டி
போலீஸ் விசாரணையில், சுதீந்திரா, எந்த ஒரு நிறுவனமும் நடத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிக்பேட்டை பகுதியில், சிறிய ஒரு எலக்ட்ரிக் ஷாப் வைத்து வாழ்க்கை நடத்ததும் சுதீந்திராவுக்கு, திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். குயிக்கர் உள்ளிட்ட பல வெப்சைட்டுகளில் வேலை தேடும் பெண்களை அணுகி, காமத்தை தீர்க்க சுதீந்திரா திட்டமிட்டுள்ளார். சுமார் 10 வெப்சைட்டுகளில் இதுபோல விளம்பரம் கொடுத்துள்ளாராம் சுதீந்திரா. வேலை தேடுவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தும் சம்பவம் இது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications