ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ்.. அட பக்கத்துல பிரபல பாலிவுட் பிரபலம்! என்ன இப்படி இறங்கிட்டாரு
டெல்லி: பாலிவுட் பிரபலம் ரன்வீர் சிங் உடன் பிரபல ஆபாசப் பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்த விளம்பரம் தான் இணையத்தில் இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது.
ஆபாச பட உலகில் நட்சத்திரங்களாக இருக்கும் பல நடிகைகள் இந்திய சினிமாவிலும் நடித்துள்ளனர். அதில் முக்கியமானவர் சன்னி லியோன். ஒரு காலத்தில் ஆபாசப் படங்களில் நடித்து வந்த இவர், இப்போது பாலிவுட்டை கலக்கி வருகிறார். இவர் ஓரிரு தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

அதேபோல மற்றொரு ஆபாசப் பட நடிகையும் தெலுங்கு இயக்குநர் ராம்கோபல் வர்மா இயக்கத்தில் உருவான க்ளைமாக்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.
ஜானி சின்ஸ்: இதற்கிடையே இந்த லிஸ்டில் இப்போது பிரபல ஆபாசப் பட நடிகர் ஜானி சின்ஸும் இணைந்துள்ளார். அவர் பாலிவுட் பிரபலம் ரன்வீர் சிங் உடன் நடித்துள்ள விளம்பரம் தான் இப்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் குறித்து விளக்கும் வகையில் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் தான் இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது.
பிரபல இந்தி நாடகம் ஒன்றை நக்கல் செய்யும் வகையில் அவர்கள் இந்த விளம்பரத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விளம்பரத்தில் ஜானி சின்ஸுக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது போலவும் இந்த விவகாரத்தில் ரன்வீர் சிங் தலையிடுவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் என்ன பிரச்சினை என கேட்க ஜானி சின்ஸின் மனைவியாக இருக்கும் நபர், "அவரால் எதையுமே செய்ய முடியல.. இதனால் நான் அவரை விட்டுப் போகிறேன்" என்கிறார்.

புதுசா இருக்கே! இரவு முழுக்க உடலுறவு! மீன்களின் லீலைகளால் தூக்கத்தை தொலைத்த பொதுமக்கள்! என்ன மேட்டர்
என்னாச்சு: தன் மகனை பற்றி இப்படிச் சொன்னதால் ஆத்திரமடைந்த மாமியார் வந்த அந்த பெண்ணை அறைகிறார். இதில் நிலைதடுமாறி அந்த பெண் முதல் தளத்தில் இருந்து கீழே விழுகிறார். உடனே பதறிப்போன ஜானி சின்ஸ் அவரும் டைவ் அடிக்க அப்படியே ஸ்லோ மோஷனில் வந்து தனது மனைவியைக் காப்பாற்றுகிறார். தனது மனைவியைக் காப்பாற்ற ஜானி சின்ஸ் அந்த நிறுவனத்தின் productஐ எடுத்துக் கொண்டார் என்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
போல்ட் கேர் என்ற நிறுவனம் தான் இந்த வித்தியாசமான விளம்பரத்தை எடுத்துள்ளது. இந்தியாவில் நீண்ட காலமாகவே பாலியல் ஆரோக்கியம் குறித்து விவாதிக்கத் தயக்கமான சூழலே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆண்களின் பாலியல் பிரச்சினை குறித்துப் பேசும் சூழலே இங்கு இல்லை என்று சொல்லாம். இந்த நிலையை மாற்றும் வகையிலேயே இப்படி ஜாலியான விளம்பரத்தை போல்ட் கேர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
என்ன காரணம்: அது சரி பாலியல் சார்ந்த பிரண்ட் ஒன்றின் நிறுவனத்தின் விளம்பரத்தில் எப்படி ரன்வீர் சிங் போன்ற ஒரு பெரிய நடிகர் நடிக்கிறார் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இந்த போல்ட் கேர் நிறுவனத்தின் இணை நிறுவனரே ரன்வீர் சிங் தான். இதன் காரணமாகவே அவர் இந்த விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனக்கு இருக்கும் பிரபலத்தை வைத்து ஆண்களின் பாலியல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ஒரு பாசிட்டிவ் இம்பேக்ட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தான் இதை எடுத்துள்ளோம். ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் குறித்து இங்கே விவாதமே இல்லாத நிலையில், அதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறேன். இது இங்குள்ள ஆண்களுக்கு நிச்சயம் உதவும்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications