Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோஷ் செயலில் ‛RealHai’ அம்சம்... சவாலில் திறமையை காட்டி பரிசுகள் வெல்ல அற்புதமான வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெய்லிஹன்ட்டின் பிரபலமான செயலி ஜோஷ் #RealHai எனும் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் ரியலாக வீடியோ பதிவிட்டு திறமையை வெளிக்காட்டி வாரந்தோறும் பரிசுகள் வெல்லலாம். இதை ஊக்கப்படுத்தும் வகையிலான பாடல் இன்று வெளியான நிலையில் அதில் பாலிவுட்டின் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஹன்சிகா மோத்வானிஆகியோர் நடித்துள்ளனர்.

இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவரும் செல்போனை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். பல சமயங்களில் பொழுதுபோக்கு அம்சங்களில் கண்டுகளித்து நேரம் செலவிடுகிறோம்.

இந்நிலையில் தான் தனித்திறமை கொண்டவர்கள் தாங்கள் விரும்பும் துறையில் தங்களை மேம்படுத்தி கொள்ளும் வகையில் பல செயலிகள் வந்துள்ளன.

Josh App Real Hai Sidarth Malhotra And Hasika Motvani Inspire Peopole To Using Unfiltered Version

இந்தியாவில் டிக்டாக் செயலி தடைப்பட்ட பிறகு ஜோஷ் செயலி அறிமுகம் ஆனது. டெய்லிஹன்ட் நிறுவனம் சார்பில் இந்த செயலி நடைமுறைக்கு வந்தது. தற்போது முதன்மையான செயலியாக இது மாறியுள்து. இந்த செயலியில் உள்ள பல்வேறு அம்சங்கள் பயனாளிகள் எளிதில் கையாளும் வகையில் உள்ளன. இதில் ஒவ்வொருவரும் தங்களின் தனித்திறமைகளை வீடியோவாக வெளியிட முடியும். மேலும், டிரென்டிங்கில் உள்ள குறும் வீடியோக்களை பதிவேற்றம், பதிவிறக்கம் செய்யலாம்.

வேடிக்கை பதிவு, கவர்ச்சி பதிவு, நடனம், இசை, பாடல் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு வீடியோக்களை இதில் காண முடியும். தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த செயலி உள்ளது. இதனை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இந்நிலையில் தான் தற்போது #RealHai எனும் தலைப்பில் புதிய அம்சம் ஒன்று வெளியாகி உள்ளது. #RealHai என்ற தலைப்பில் மக்கள் தங்களின் திறமையை கூச்சமின்றி வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது. அதேநேரத்தில் இதற்கான அறிமுக பாடல் இன்று வெளியானது. இதில் பாலிவுட்டின் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடனமாடுகின்றனர். சித்தார்த் மல்ஹோத்ரா நாட்டின் வடக்கு பகுதியையும், ஹன்சிகா மோத்வானி தெற்கு பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்த பாடலுக்கு சஜித் இசையமைத்துள்ளார்.

இதுகுறித்து ஜோஷ் செயலி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், ‛‛#Real Hai என்பது நடனம், பேஷன், உடற்பயிற்சி, நகைச்சுவை அல்லது பொழுதுபோக்கு என எந்த வகையாக இருந்தாலும் கூட மக்கள் உண்மையில் முயற்சிக்க வேண்டும். இதில் போலித்தனம் வேண்டாம். முதலில் தவறாக இருந்தாலும் கூட நாட்கள் ஆகஆக திறமை மேம்படும். இதனால் நீங்கள் இதில் பங்கேற்று ஒவ்வொரு முறையும் வழங்கும் சவாலில் பங்கேற்று வெல்ல வேண்டும். இதற்காக வாரந்தோறும் 6 சவால்கள் வழங்கப்படும். இதிய புதிய முறையில் சிந்தித்து வீடியோக்கள் பதிவிட வேண்டும். இதன்மூலம் ஒவ்வொருவரும் பல வீடியோக்களை உருவாக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு அபுதாபியில் நடைபெறும் ஐஐஎப்ஏ விருதுகளுக்கான கோல்டன் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வெல்லலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+