For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபாஷ்! கேரளா முதல்வருக்கு ஆலோசகர்களாக மூத்த பத்திரிகையாளர், மூத்த வழக்கறிஞர் நியமனம்...'நோ' சம்பளம்

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா முதல்வர் பிணராயி விஜயனின் ஊடக ஆலோசகராக மூத்த பத்திரிகையாளரும் கைரளி டிவி நிர்வாக இயக்குநருமான ஜான் பிரிட்டாஸ், சட்ட ஆலோசகராக மூத்த வழக்கறிஞர் எம்.கே. தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணிகளுக்காக இவர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி வெற்றி பெற்று பிணராயி விஜயன் முதல்வராகி உள்ளார். முதல்வருக்கான ஆலோசர்களை நியமிக்கும் அமைச்சரவைக் கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

Journalist John Brittas is Pinarayi's new media advisor

அப்போது முதல்வர் பிணராய் விஜயனின் ஊடக ஆலோசகராக மூத்த பத்திரிகையாளர் ஜான் பிரிட்டாஸ், சட்ட ஆலோசகராக மூத்த வழக்கறிஞர் எம்.கே. தாமோதரன் ஆகியோரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவருக்கும் ஊதியம் எதுவும் வழங்கப்படமாட்டாது. மூத்த ஐஏஎஸ் அதிகாரியான வி.ஜே.குரியன் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்திலும் நேற்று புதிய தலைமைச் செயலர், முதல்வரின் செயலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Senior journalist and MD of Kairali TV John Brittas was appointed media advisor to Kerala chief minister Pinarayi Vijayan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X