தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து 200 ஆண்டுகள்.. நினைவாக சிறப்பு தபால் தலை வெளியிட்ட மத்திய அரசு!
டெல்லி: தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து 200 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிட்டார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா.
இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இலங்கையில் விவசாயம் சார்ந்த தொழில்கள், காபி மற்றும் ரப்பர் தோட்ட வேலைகளுக்காக தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்களை ஆங்கிலேயே அரசு இலங்கைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியது. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் ஏராளமான வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொண்டனர்.

இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் பெற்ற பிறகு குடியுரிமை சிக்கல் எழுந்ததால் இரு நாடுகளும் உடன்படிக்கை செய்து கொண்டு அதன் பெயரில் மலையகத் தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. மேலும் பல்லாயிரக்கணக்கானோரை இந்தியா திரும்ப அழைத்துக்கொண்டது. ஆங்கிலேயர்களால் இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையக தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்ததனை நினைவு கூரும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் விழா நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தி விழா மூன்று நாட்கள் நடைபெற்றது.
இந்நிலையில் இலங்கையில் மலையக தமிழர்களின் 200வது ஆண்டை குறிக்கும் வகையில் மத்திய அரசு இன்று தபால் தலை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டமான், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையை பாஜக தேசிய தலைவர் நட்டா வெளியிட, அதனை இலங்கை அரசின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் பேசிய ஜே.பி.நட்டா, பாரதத்தை சேர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயந்த 1823ஆம் ஆண்டை கொண்டாடுவது நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. இந்தியாவை சேர்ந்த தமிழர்கள் இலங்கையில் குடி பெயர்ந்ததன் 200ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் தபால் தலை வெளியிடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதன் மூலம் இலங்கை இந்திய உறவு மேம்படும் எனத் தெரிவித்தார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications