For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டுவெடிப்பு வழக்கில் சாமியாரை விடுவித்த நீதிபதி பாஜகவில் இணைகிறார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    குண்டுவெடிப்பு வழக்கில் சாமியாரை விடுவித்த நீதிபதி பாஜகவில் இணைகிறார்!- வீடியோ

    ஹைதராபாத்: ஹைதராபாத்தின் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி பாஜகவில் இணையப் போகிறார்.

    இந்த நீதிபதியின் பெயர் ரவீந்தர் ரெட்டி. தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவர் ஹைதராபாத் பெருநகர செஷன்ஸ் நீதிபதியாக இருந்தவர். கடந்த ஏப்ரல் 16ம் தேதி இவர் முக்கியமான மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்தார். அப்போது சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரையும் விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பளித்தார்.

    Judge who delivered Mecca Masjid blast verdict set to join BJP

    தீர்ப்பளித்த கையோடு தனது பதவியை ராஜினாமா செய்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதி விலகினார். இந்த நிலையில் தற்போது இவர் பாஜகவில் இணையவுள்ளார். இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜக தலைவர் அமித் ஷாவை இவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தெலங்கானா பாஜக தலைவர் டாக்டர் கே.லட்சுமணும் உடன் இருந்தார். அந்த சமயத்தில்தான் தான் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிவித்தார் ரெட்டி.

    2007ம் ஆண்டு மே 18ம் தேதி மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. இந்த வழக்கில் சுவாமி அசீமானந்த் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அனைவரையும் விடுவித்த நீதிபதி ரெட்டி, யாரா் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று அதிரடியாக கூறியிருந்தார். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பதற்காக அவரை தீவிரவாதத்தில் ஈடுபடுவர் என்று கூற முடியாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பின்போது தெரிவித்திருந்தார்.

    ரெட்டி பதவியில் இருந்தபோது அவர் மீது சில சர்ச்சைகளும் இருந்தன. அதுதொடர்பாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் விசாரணையும் நடத்தி வந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் ரெட்டி பாஜகவில் சேரப் போவதாக கூறியுள்ளார்.

    English summary
    Reddy, it may be recalled had been suspended along with 11 other judges for protesting the appointment of judges who hail from Andhra Pradesh in Telangana. The suspension was however revoked. Reddy, at the time of his resignation was under investigation by the High Court on the allegation that he had shown undue haste, while granting anticipatory bail to an accused in a land dispute case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X