10 வயது மாணவியின் ஐபோன் உட்பட ரூ. 90 ஆயிரத்தை திருடிய வழக்கு... ஆசிரியைக்கு ஜாமீன்
மும்பை: மாணவியின் ரூ 90 ஆயிரம் மதிப்பிலான ஐபோன் மற்றும் கைப்பையை திருடிய ஆசிரியைக்கு ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது.
மும்பை ஜுகுவில் உள்ள சர்வதேச பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவி ஒருவர் கடந்தவாரம் நீச்சல் பயிற்சிக்கு செல்வதற்காக தன்னுடைய ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் கைப்பையை உடைமாற்றும் அறையில் வைத்து விட்டு சென்றுள்ளார்.
பயிற்சி முடிந்து திரும்பி வந்த மாணவி தனது உடமைகள் திருடு போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக மாணவியின் தாயார் சார்பில் ஜுகு போலீசில் புகார் அளிக்கப் பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை மயூர் பட்வாலே (வயது 38), மாணவியின் செல்போனை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்து மாணவியின் கைப்பை மற்றும் செல்போனை கைப்பற்றினர்.
விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியைக்கு தற்போது ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications