ட்ரம்பை மிஞ்சினார் மோடி.. 6.9 மில்லியன் ஃபாலோயர்களுடன் இன்ஸ்டாகிராமில் முதலிடம்
இன்ஸ்டாகிராமில் உலகிலேயே மிக அதிகமானவர்களால் பின் தொடரப்படுவராக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்
டெல்லி: புகைப்படங்களை பகிர உதவும் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பின்னுக்கு தள்ளி முதலிடம் வகிக்கிறார். 6.9 மில்லியன் பேர் மோடியை பின் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை பகிர உதவும் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரமர் மோடி தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்தநிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் பின்தொடரும் உலகத் தலைவர்களின் கணக்குகளைக் கொண்டு பர்சன் மார்ஸ்டெல்லர்ஸ் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
ஓராண்டுக்கு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 325 தலைவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதற்காக, உலக நாடுகளின் பிரதமர்கள், முதல்வர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கணக்குகளை அந்நிறுவனம் தேர்வு செய்தது. தற்போது அந்த ஆய்வு முடிவுகளை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் உலக அளவில் அதிகம் பேர் பின் தொடர்பவர்களின் அடிப்படையில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.9 மில்லியன் பேரால் மோடி பின் தொடரப்படுவதாகவும், அவருக்கு அடுத்த இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் 6.4 மில்லியன் பேரால் பின் தொடரப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் போப் ஆண்டவர் இடம்பெற்றுள்ளார்.
பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இதுவரை 53 புகைப்படங்களே இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு புகைப்படத்திற்கும் குறைந்தபட்சம் 2,23,000 விருப்பங்கள் வந்துள்ளன. இதனாலும், நரேந்திர மோடி பிரபலமானவராக அறிவிக்கப்படுவதாக பர்சன் மார்ஸ்டெல்லர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications