ஜெ.க்கு 4 ஆண்டு சிறை- ரூ100 கோடி அபராதம்- நீதிபதி குமாரசாமி ரத்து செய்த 'குன்ஹா தீர்ப்பு' இதுதான்..
பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி..
1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 18 ஆண்டுகாலம் நடைபெற்றது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தண்டனை விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார். தற்போது குன்ஹா தீர்ப்பை கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்... அதனால் ஏற்பட்ட விளைவுகள் ஒரு மீள்பார்வை:

- ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய பேருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
- ஜெயலலிதாவுக்கு மட்டும் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
- இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட பல்வேறு விலை மதிப்பு மிக்க ஆபரணங்களை ஏலம் விட்டு அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.
- சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
- 4 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி உடனடியாக பறிபோனது.
- மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. பதவியும் உடனடியாக ரத்தானது.
- ஊழல் தடுப்பு பிரிவில் ஒருவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தண்டனை விதித்தால் அவருக்கு எத்தனை ஆண்டு தண்டனை வழங்கப்படுகிறதோ அந்த தண்டனை காலம் முடியும் வரையும், அதன் பிறகு 6 ஆண்டுகளும் தேர்தலில் நிற்க முடியாது.
- இதன்படி மொத்தம் 10 ஆண்டுகாலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது.
தற்போது மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பொறுப்பேற்க உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications