நீதிபதி கண்ணன் நியமனத்தை கடுமையாக எதிர்த்தது திமுக- மார்க்கண்டேய கட்ஜூ புதிய புகார்!
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த கண்ணனை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தபோது அவர் பிராமணர் என்று கூறி திமுக எதிர்ப்பு தெரிவித்ததாக பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூ புதியதாக குற்றம் சாட்டி உள்ளார்.

நீதிபதி அசோக் குமாரின் பதவி நீட்டிப்புக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக கூட்டணி கட்சி சார்பில் நெருக்கடி தரப்பட்டது என்று திமுக மீது சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்திருந்தார். இப்போது திமுக மீது மேலும் ஒரு புதிய புகாரை கட்ஜூ சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமது வலைப்பக்கத்தில் மார்க்கண்டே கட்ஜூ பதிவு செய்துள்ளதாவது:
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த கண்ணனை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று மூத்த நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்' அதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கண்ணன் பிராமணர் என்று கூறி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர்ந்த கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எனினும், கண்ணன் நீதிபதியாக நியமிக்கப்பட்டாலும், மத்திய அரசுக்கு அக்கட்சி நெருக்கடி அளித்ததால் பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். சென்னையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் நீதிபதியாக நியமிக்கப்படும் போது, சென்னை உயர்நீதி மன்றத்தில் நியமிக்கப்படுவது தான் முறை.
ஒரு அரசியல் கட்சியின் நெருக்கடிக்குப் பணிந்து, நற்பெயருடன் இருந்த கண்ணன் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அரசியல் நெருக்கடிகளுக்கு ‘கொலீஜியம்' வளைந்து கொடுக்கிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.
இவ்வாறு மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications