ஜெ.வுக்கு சிறை தண்டனை கொடுத்த நீதிபதி குன்ஹா பணியிடம் மாற்றம்!
பெங்களூர்: அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றப் பதிவாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1991-96-ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மைக்கேல் டி குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ந் தேதி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு கால சிறைத் தண்டனை மற்றும் ரூ100 கோடி அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

இந்தத் தீர்ப்பினால் ஜெயலலிதாவின் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. அடுத்த 10 ஆண்டுகாலத்துக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமையும் ஏற்பட்டது. இந்தத் தீர்ப்பு வழங்கியதற்காக அதிமுகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நீதிபதி குன்ஹாவை பல்வேறு தரப்பினரும் நேர்மையான தீர்ப்பை வழங்கியவர் என்றும் பாராட்டினர்.
இந்நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்து வரும் குன்ஹா தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் கர்நாடகா உயர்நீதிமன்ற (ஊழல் தடுப்பு கண்காணிப்பு ) பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முன் இப்பதவியில்தான் குன்ஹா இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பை பெங்களூரு சிபிஐ நீதிமன்ற நீதிபதி சோமராஜ் கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications