சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் ஆர்.எம்.லோதா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.எம். லோதா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமை நீதிபதியாக இருந்த பி.சதாசிவம் நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இன்று லோதா புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

64 வயதான லோதா, ஐந்து மாதங்களுக்கு மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார். செப்டம்பர் 27ம் தேதி பதவியிலிருநது ஓய்வு பெறுவார்.
நிலக்கரி பேர ஊழல் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்த பெஞ்சுக்கு தலைமை வகித்தவர் லோதா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications