ஆபாச படம் பார்த்ததால் விபரீதம்.. 8 வயது சிறுமியை, 5 சிறுவர்கள் கூட்டு பலாத்காரம் செய்த கொடுமை

ஆபாச படம் பார்த்த சிறுவர்கள் 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆபாச படம் பார்த்து சிறுமியை 5 சிறுவர்கள் கூட்டு பலாத்காரம்- வீடியோ

    டேராடூன்: சிறுவர்கள் 5 பேர் ஆபாச படம் பார்த்த பின்னர் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டேராடூன் சஹஸ்பூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 5 சிறுவர்கள் போனில் ஆபாச படங்களைப் பார்த்துள்ளனர். பின்னர், வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் 5 பேரும் 9 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள். இந்த சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை சஹஸ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Juvenile crime: 5 Children raped 8 years old girl after watching porn

    இந்த சம்பவம் குறித்து சஹஸ்பூர் காவல் நிலைய போலீஸ் நரேஷ் ரத்தோர் கூறுகையில், சிறுவர்கள் போனில் ஆபாச படங்களைப் பார்த்த பின்னர், சிறுமியை பலாத்காரம் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர்களுக்கு தெரிந்த நாள் முழுவதும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணை குறி வைத்துள்ளனர். அதன் பிறகு அந்த சிறுமியை இவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு போக்சோ சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள் என்பதால் அவர்கள் சிறார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்" என்று கூறினார்.

    இணைய தளத்தில் ஆபாச படங்கள் நிறைய இருப்பதால் சிறுவர்களிடம் மொபைல் போன்கள் மிக எளிதாக கிடைப்பதால் ஆபாச படங்களைப் பார்த்து கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் பெரிய அளவில் உள்ளன. இதன் மூலம் பல சிறுவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது.

    மத்திய அரசு ஆபாச படங்களை வெளியிடும் இணைய தளங்களை தடை செய்துள்ளதாகக் கூறினாலும் இன்னும் பல ஆபாச பட இணைய தளங்கள் தடை செய்யப்படாமல்தான் உள்ளது. இது பல சிறுவர்களின் மன நிலையை சீரழித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+