சாலையில் இறங்கி போராடுவேன்.. மபி கமல்நாத் அரசை நேரடியாக எதிர்க்கும் சிந்தியா.. காங்கிரசில் கலகம்!
மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் நானே சாலையில் இறங்கி போராட்டம் செய்வேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
போபால்: கமல் நாத் தலைமையிலான மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் நானே சாலையில் இறங்கி போராட்டம் செய்வேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
டெல்லி: கமல் நாத் தலைமையிலான மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் நானே சாலையில் இறங்கி போராட்டம் செய்வேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் ஜோதிராதித்யா சிந்தியா. இவர் அங்கு முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார். ஆனால் ராகுல் காந்தி முதல்வர் பதவியை கமல் நாத்திடம் கொடுத்தார்.
அப்போதே ஜோதிராதித்யா சிந்தியா அதிர்ச்சிக்கு உள்ளானார். தனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்ற கடுமையான வருத்தத்தில் சிந்தியா இருந்தார்.

மோசம்
இதன்பின் நடந்த லோக்சபா தேர்தலின் இவரோ, இவரின் ஆதரவாளர்களோ பெரிய அளவில் பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசத்தில் வென்ற காங்கிரஸ், லோக்சபா தேர்தலில் மோசமாக தோற்றது. இதற்கு ஜோதிராதித்யா சிந்தியாவின் கோபம்தான் காரணம் என்று கூறினார்கள். அப்போது தொடங்கிய பிரச்சனை மத்திய பிரதேச காங்கிரசில் இப்போதும் நீடித்து வருகிறது.

இப்போது என்ன
இந்த நிலையில் போபாலில் ஆசிரியர்கள் உடன் நடந்த ஆலோசனை கூட்டம் ஒன்றில், சிந்தியா பேசினார். அதில், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவுள்ளது. வாக்குறுதிகள் பல இன்னும் நிஜமாகவில்லை. உங்கள் எல்லோருடைய கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

நான் போராடுவேன்
உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் நான் உங்களுடன் உடன் இருப்பேன். உங்களுக்கு யாரும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் இருப்பேன். நானே அரசுக்கு எதிராக போராடுவேன். சாலையில் இறங்கி போராடுவேன். கொஞ்சம் பொறுமை காப்போம். நமக்கும் நேரம் வரும். நான் உங்களுக்கு கத்தியாகவும், கவசமாகவும் இருப்பேன்., என்று அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு மத்திய பிரதேச அரசியலை உலுக்கி உள்ளது.

காங்கிரஸ் அதிர்ச்சி
காங்கிரஸ் தலைவர்களையும் அவரின் இந்த பேச்சு அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. முன்னதாக ஜோதிராதித்யா சிந்தியா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர் என்ற பயோவை நீக்கினார். காங்கிரஸ் உறுப்பினர், எம்பி என்பதை நீக்கிவிட்டு மக்கள் பணியாளர், கிரிக்கெட் ஆர்வலர் என்று மாற்றினார்.இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா. கட்சியில் இருந்து மொத்தமாக வெளியேற திட்டமிடுகிறாரா என்று கேள்விகள் எழுந்தது. இது பெரிய தீயாக பரவியது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications