தேசிய கபடி வீரர் பட்டப்பகலில் சுட்டு கொலை.. தலையை குறிபார்த்து சுடும் காட்சி சிசிடிவியில் பதிவு
சண்டிகர்: இந்திய தேசிய கபடி அணியில் விளையாடிய சுக்வீந்தர் சிங் அடையாளம் தெரியாத இரு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள், பல ரவுண்டுகள் சுடும் காட்சி சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோட்டக் நகரையடுத்த ரித்வால் கிராமத்தை சேர்ந்தவர் சுக்வீந்தர் சிங் (24). இந்திய தேசிய அணிக்காக விளையாடும் கபடி வீரராகும்.
சுக்வீந்தர் சிங் நேற்று விளையாட்டு பயிற்சி முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணையில் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகள் சிக்கியுள்ளன. சுக்வீந்தர் சிங், செல்போனில் பேசியபடியே வீட்டுக்கு நடந்து செல்வதும், எதிர்புறமாக ஸ்கூட்டரில் இருவர் வருவதும், அதில் பின்னால் உட்கார்ந்திருந்தவன், சுக்வீந்தர் சிங்கின் நெஞ்சை பார்த்து சுடுவதும் பதிவாகியுள்ளது.
சுருண்டு விழுந்த சுக்வீந்தர் சிங்கை நெருங்கும் அந்த இருவரும், அவரது தலையில் மாறி மாறி சுடுகிறார்கள். சுக்வீந்தர் சிங் துடிதுடித்து பலியாகிறார். இந்த காட்சிகள் சிசிடிவி ஃபுட்டேஜில் பதிவாகியுள்ளது.
கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். யாரிடமும் சுக்வீந்தர் சிங்க்கு தனிப்பட்ட விரோதம் இல்லையென்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications