சொத்துப் பிரச்சினையா... அதனால் கொலையா.. கலாபவன் மணி வழக்கில் இடியாப்பச் சிக்கலில் போலீஸ்!
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் கோடிக் கணக்கான சொத்துக்கள் யார், யாரிடம் உள்ளது அவற்றை யாராவது அபகரித்துவிட்டார்களா என்று கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் கலாபன் மணி கல்லீரல் பிரச்சனையால் மரணம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மணியை யாராவது திட்டமிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சொத்து
கலாபவன் மணிக்கு கோடிக் கணக்கில் சொத்து இருப்பதாக திருச்சூர் மாவட்ட போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த சொத்துக்களை யாராவது அபகரித்துள்ளனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிக்கே
மணி பெரும்பாலான சொத்துக்களை பினாமிகளின் பெயரில் வாங்கியுள்ளார். மேலும் பினாமிகளிடம் ஏராளமான பணத்தையும் கொடுத்து வைத்துள்ளார். அவரது பணம் யார், யாரிடம் எவ்வளவு உள்ளது என்ற விபரம் மணிக்கே தெரியாதாம்.

பணம்
தன்னை படங்களில் நடிக்க வைக்க, நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்ய அழைத்து வந்தோரிடம் மணி நேரடியாக பணத்தை பெற்றது இல்லையாம். மாறாக தனது பினாமிகளின் வங்கி கணக்கு விபரங்களை அளித்து அதில் செலுத்துமாறு தான் கூறி வந்துள்ளார்.

மனைவி, மகள்
உடல் நலக் குறைவு காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த மணி நெடுங்காலமாக வீட்டிற்கே செல்லவில்லையாம். மனைவி, மகளை பார்க்காமல் இருந்துள்ளார். சினிமாவை விட்டுவிட்டு வியாபாரம் துவங்க மணி திட்டமிட்டதாக அவரது உதவியாளர்கள் 3 பேர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications