எண்ணூர் துறைமுகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்: ஜி.கே வாசன் அறிவிப்பு
டெல்லி: எண்ணூர் துறைமுகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் சென்னை துறைமுகத்திற்கு உதவியாக செயல்பட்டு வந்தது எண்ணூர் துறைமுகம். இது இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், தமிழ்நாடு மின்வாரியத்தின் தேவைக்காக நிலக்கரி போக்குவரத்திற்கு பயன்பட்டது. பின்னாளில் தமிழ்நாடு அரசு மின் திட்டத்திற்காக துறைமுகத்தை விரிவுபடுத்தியது.

இந்நிலையில், எண்ணூர் துறைமுகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் வைக்கப் பட முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறியிருப்பதாவது :-
சென்னைத் துறைமுகத்திற்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவில் அமிந்து உள்ளது எண்ணூர் துறைமுகம். இது இந்தியாவின் பன்னிரெண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். அரசுடைமையாக்கப்பட்ட முதல் துறைமுகமும் இதுவே. இதன் மீது 26,000 மில்லியன் ரூபாய்களை தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இத்துறையின் பங்குகளில் 68 சதவிகிதம் நடுவண் அரசிடமும், மீதம் 32 சதவிகிதம் சென்னைத் துறைமுகமும் கொண்டுள்ளன. இது 86 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது .இத்துறைமுகத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்டபட்டு உள்ளது. இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications