ஜெயேந்திரர் உடல் நிலையில் முன்னேற்றம்.. ஐ.சி.யூவிலிருந்து நார்மல் வார்டுக்கு திரும்பினார்
விஜயவாடா: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி உடல் நலக்குறைவால் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது.
காஞ்சி மடத்தி 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு ( 81) விஜயவாடாவிலும் மடம் உள்ளது. அங்கு தங்கியிருந்து ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வந்த அவருக்கு நேற்று திடீரென உடல் நலம் குன்றி மயக்கம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர், அந்த நகரிலுள்ள 'ஆந்திரா மருத்துவமனை'யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஐ சி யு பிரிவில் ஜெயேந்திரர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
டாக்டர் ரவிராஜு தலைமையில் மருத்துவ குழு ஜெயேந்திரருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ரவிராஜு கூறுகையில், ஜெயேந்திரருக்கு ரத்தத்தில் ஷுகர் அளவு மற்றும் சோடியம் அளவு குறைந்துள்ளது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்றார்.
ஜெயேந்திரருக்கு உடல் நலம் குன்றிய தகவல் அறிந்த ஏராளமான பக்தர்கள் அவர் நலம் பெற சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஜெயேந்திரர் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. அவர் ஐசியூ பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து மடத்திற்கு திரும்புவார் எனவும், அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெயேந்திரரை பார்த்து நலம் விசாரித்ததோடு, அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். சென்னையில் இருந்து, ஜெயேந்திரரின் தனிப்பட்ட மருத்துவர்களும் விஜயவாடா சென்றுள்ளனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications