வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு- மத்திய அரசு உதவ வேண்டும்... ராஜ்யசபாவில் கனிமொழி எம்.பி
டெல்லி: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசு உதவ வேண்டும் என்று ராஜ்யசபாவில் தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார்.
தமிழக வெள்ள பாதிப்பு குறித்த விவாதத்தின் போது ராஜ்யசபாவில் இன்று கனிமொழி பேசியதாவது:
தமிழகத்தில் மிக மோசமான மழை வெள்ளத்துக்கு பல லட்சம் பேர் பாதிக்கபட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தாம்பரம், வண்டலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.மக்கள் நம்பிக்கையற்று போயுள்ளனர்.. மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லை.
மாணவர்கள் 2 வார காலத்துக்கும் மேலாக பள்ளிகளுக்குச் செல்லவில்லை. முப்படையின் மீட்பு பணிகள் பாராட்டுக்குரியது.
இந்த நேரத்தில் தமிழக அரசை நாங்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கவில்லை. தமிழக அரசுடன் இணைந்து தி.மு.க.வும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது.
தமிழகத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது: கனிமொழி
https://t.co/54IgLERbzN
#ChennaiFloods #மழைக்கரம் #மழை pic.twitter.com/taWzpiZeqs
— ippodhu dot com (@ippodhu) December 2, 2015 வெள்ள நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போதுமான நிதி உதவியையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்து நாடாளுமன்ற குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது...
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications