திருச்சி சிவாவுடனான மோதலை "மேடம்" கனிமொழி மூலம் கருணாநிதிக்கு தெரிவித்தேன்... சசிகலா புஷ்பா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவாவுடனான மோதலை கனிமொழி மூலம் திமுக தலைவர் கருணாநிதிக்கு தாம் தெரிவித்ததாக அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சரமாரியாகத் தாக்கினார் சசிகலா புஷ்பா. இது குறித்து தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா, சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் ராஜ்யசபாவில் திடீரென நேற்று பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா என்னை அறைந்தார்; ஒரு எம்.பி.யை ஒரு கட்சியின் தலைவர் எப்படி அறையலாம்? ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய சொல்கிறார் ஜெயலலிதா; நான் ராஜினாமா செய்யமாட்டேன் என ஜெயலலிதா மீது அதிரடியாக புகார் கூறினார்.. அவர் ராஜ்யசபாவில் பேசிக் கொண்டிருந்த போதே அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

கனிமொழி ஆதரவு

கனிமொழி ஆதரவு

மேலும் திருச்சி சிவாவிடம் தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சசிகலா புஷ்பா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக ராஜ்யசபாவில் திமுகவின் கனிமொழிதான் முதல் ஆதரவுக் குரலை வெளிப்படுத்தினார். பின்னர் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் எம்.பிக்கள் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

திமுகவுக்கு ரகசியங்கள் கடத்தல்?

திமுகவுக்கு ரகசியங்கள் கடத்தல்?

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக அலுவலகத்துக்கு எதிரே செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, அதிமுகவின் ரகசியங்களை திமுகவுக்கு நான் கசியவிடவில்லை. திமுக ஆதரவாக நான் செயல்படவில்லை என்பதை ஆதாரத்துடன் என்னால் நிரூபிக்க முடியும்.

கனிமொழி மூலம் கருணாநிதிக்கு...

கனிமொழி மூலம் கருணாநிதிக்கு...

திருச்சி சிவா திமுகவின் எம்பி என்பதால் உணர்ச்சிவசப்பட்டு தாக்கினேன். அது குறித்து "மேடம்" கனிமொழி மூலமாக அக்கட்சித் தலைவர் கருணாநிதிக்கு தெரியப்படுத்தினேன். எந்த கட்சியில் சேருவது என இதுவரை முடிவெடுக்கவில்லை. இனி நான் சுதந்திரப் பறவை என்றார்.

கனிமொழிக்கு வாழ்த்து

கனிமொழிக்கு வாழ்த்து

ஏற்கனவே அதிமுகவில் இருந்து கொண்டே கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இதனாலேயே அப்போதே சசிகலா புஷ்பாவுக்கு அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+