அமித்ஷாவை கொல்ல திட்டமிட்டாராம் சந்திரபாபு நாயுடு... ஆந்திர பாஜக தலைவர் பகீர் புகார்
அமித்ஷாவை திருப்பதியில் வைத்து கொலை செய்ய சந்திரபாபு நாயுடு முயற்சித்தார் என்று ஆந்திர பாஜக தலைவர் பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

அமராவதி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை திருப்பதியில் வைத்து கொலை செய்ய சந்திரபாபு நாயுடு சதி திட்டம் தீட்டியதாக ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சார்பில் விஜயவாடாவில் நேற்று மெகா தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பாஜக தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்களும் போலீஸாரும் பாஜக மேலவை உறுப்பினர் சோமு வீரராஜு மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். சந்திரபாபு நாயுடு அரசை பற்றி யாரேனும் கேள்வி கேட்டால் போதும் அவர்களுக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்கின்றனர்.

பிரதமர் மோடி
நாயுடு அரசு எல்லாவகையிலும் ஊழலில் ஈடுபட்டுள்ளது. ஊழல் விவகாரத்தை எழுத 300 பக்கங்கள் போதாது. சந்திரபாபு நாயுடு சிறப்பு விமானங்களில் பயணிக்கிறார், 7 நட்சத்திர விடுதிகளில் தங்குகிறார். வாஜ்பாயை சந்திரபாபு நாயுடு ஏமாற்றியதை அறிந்தே பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

திருந்தவில்லை
உங்கள் வயதை வைத்து நீங்கள் மாறியிருப்பீர்கள் என மோடி நினைத்தார். ஆனால் நீங்கள் ( நாயுடு) இன்னும் மாறவில்லை. திருப்பதி கோயிலில் அமித் ஷா சாமி கும்பிட குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சியினரை வைத்து போராட்டம் நடத்தினார்.

டிஜிபி மாற்றி கூறினார்
அப்போது அமித்ஷாவின் வாகனத்தின் மீது கல் எறியப்பட்டதை அனைவரும் பார்த்தனர். போராட்டம் என்ற பெயரில் அவரை படுகொலை செய்ய சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். ஆனால் டிஜிபி மலகொண்டையா தனது அறிக்கையில் ஏதோ குச்சி வந்து காரில் விழுந்ததாக கூறினார் என்று கண்ணா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஆதாரம் இருக்கிறதா
இதுகுறித்து தெலுங்கு சேத கட்சியின் ஆந்திர மாநில தலைவர் கிமிடி காலா வெங்கட ராவ் கூறுகையில், கண்ணா கூறிய குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம். அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா. அமித்ஷா திருப்பதிக்கு வந்தபோது எங்கள் கட்சி சார்பில் எந்த போராட்டத்துக்கு நாங்கள் அழைப்புவிடுக்கவில்லையே என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications