கன்னட நடிகர் உபேந்திரா தனிக்கட்சி தொடங்குகிறார்... 'சிஸ்டத்தை' மாற்ற போவதாக அறிவிப்பு
பெங்களூர்: பிரபல கன்னட திரைப்பட நடிகர் உபேந்திரா தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். தற்போதைய சிஸ்டத்தை மாற்றி அமைக்கவே தாம் அரசியலில் நுழைவதாகவும் உபேந்திரா கூறியுள்ளார்.
கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கவும் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

உபேந்திரா தனிக்கட்சி
இந்நிலையில் கன்னட நடிகர் உபேந்திரா விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் உபேந்திரா கூறியதாவது:

மக்கள் சேவைக்காக
அரசியல்வாதிகள் மக்களை ஜாதிகளின் பெயராலும் மதத்தின் பெயராலும் கூறு போடுகின்றனர். மக்களுக்கு அரசியல்வாதிகள் சேவை செய்ய வேண்டும். ஆனால் நடைமுறை அப்படி இல்லை.

சிஸ்டத்தை மாற்ற...
ஆகையால் மக்களுக்காக சேவையாற்ற, தற்போதைய சிஸ்டத்தை மாற்ற நான் அரசியலுக்கு வருகிறேன். விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன். இது தொடர்பாக மக்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறேன்.

விரைவில் பெயர் அறிவிப்பு
கர்நாடகா சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். விரைவில் கட்சி பெயர், கொடி அறிவிக்கப்படும். திரைப்படங்களில் அதிகார வர்க்கங்களுக்கு எதிராக நிறையவே சண்டை போட்டிருக்கிறேன். தற்போது மக்களுக்காக நிஜவாழ்க்கையில் போராட களமிறங்குகிறேன்.
இவ்வாறு உபேந்திரா கூறினார்.

பாஜகவும் உபேந்திராவும்
முன்னதாக அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் உபேந்திரா இணைய கூடும் என செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது தனிக்கட்சி தொடங்குவதாக உபேந்திரா அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications