கிர்லோஸ்கர் எம்.டி மகனை கடத்திய திரைப்பட ஹீரோ அதிரடி கைது.. பெங்களூரில் சினிமா பாணியில் சம்பவம்
பெங்களூர்: பிரபல தொழிலதிபர் மகனை கடத்தி பணம் பறிக்க முயன்ற கன்னட திரைப்பட ஹீரோவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிர்லோஸ்கர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விநாயக் பபத். இவரது 19 வயது மகன் இஷான் கடத்தப்பட்ட இளைஞராகும். கோகிலு கிராஸ் பகுதியில் உள்ள கல்லூரியில் இஷான் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி அவரது கல்லூரி அருகில் வைத்து, மர்ம நபர்களால் காரில் இஷான் கடத்தி செல்லப்பட்டார்.
Munna@Eshwar , a lead role aspirant in a movie along with 4 more accused arrested in student kidnap case pic.twitter.com/mPhO7T1qsN
— Dr. HARSHA P.S, IPS (@DCPNEBCP) August 29, 2016
இதுகுறித்து விநாயக் போலீசில் புகார் அளித்ததும், வழக்கின் தீவிரத்தை புரிந்து கொண்ட போலீஸ் கமிஷனர், நேரடியாக இதில் கவனம் செலுத்தினார். இதையடுத்து நேற்று இஷான் மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பெங்களூர் வடகிழக்கு மண்டல துணை கமிஷனர், பி.எஸ்.ஹர்ஷா, 'ஒன்இந்தியா தமிழிடம்' கூறியது: வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து மொத்தம் 10 தனிப்படைகளை அமைத்தோம். நகரை சுற்றிலும் வாகன சோதனையை தீவிரப்படுத்தினோம். இஷான் எங்கு கொண்டு செல்லப்படுகிறார் என்பதை பல்வேறு வழிகளில் போலீசார் கண்காணித்தபடியே இருந்தனர்.
நகரைவிட்டு வெளியேற முடியாமல் கடத்தல் கும்பல் தடுமாறியது. அதிகாலை வேளையில் தும்கூர் தப்பி செல்ல முயன்றபோது, அங்கும் வாகன சோதனை இருப்பதை பார்த்து பெங்களூருக்கே திரும்பி வந்தது.
ஒரு கட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்ப முடியாது என்ற எண்ணம், கடத்தல் கும்பலுக்கு வந்துவிட்டது. இதையடுத்து ஹெப்பால் அருகே காரை நிறுத்தி இஷானை வெளியே தள்ளிவிட்டு, அந்த கும்பல் தப்பியோடியது. போலீசார் இஷானை மீட்டனர்.
இதையடுத்து, கடத்தல்காரர்களை போலீசார் சேஸ் செய்து கைது செய்தனர். கைதானவர்கள் முனியப்பா (28), ஹசன் டோங்கிரி (26), ஜெகதீஷ் (32), ஜகன்நாதா (28), மனோஜ் (19) என்று தெரியவந்தது. இவ்வாறு துணை கமிஷனர் ஹர்ஷா தெரிவித்தார்.
சேலஞ்சர் என்ற கன்னட திரைப்படத்தை முனியப்பா தயாரித்து அதில் நடித்தும் வருகிறாராம். படத்தை தயாரித்து முடிக்க பணம் பற்றாக்குறையானதால் தொழிலதிபர் மகனை கடத்தி பணம் பறிக்க முனியப்பா முடிவு செய்துள்ளார். டிவி சேனல் ரியாலிட்டி ஷோ ஒன்றுக்கு முனியப்பா சென்றபோது, டோங்கிரியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது திட்டத்தை டோங்கிரியிடம் கூறி, அடியாட்களை ஏற்பாடு செய்து கொண்டு இந்த கடத்தல் நடந்துள்ளது.
மல்லேஸ்வரத்திலுள்ள இஷான் வீட்டை நோட்டமிட்டு, அவர் எப்போது வெளியே செல்வார், எங்கு செல்வார் என்பதை 15 நாட்களாக பின்தொடர்ந்து சென்று அறிந்து கொண்ட கடத்தல் கும்பல் இறுதியாக கடத்தியுள்ளது.
முனியப்பா ஏற்கனவே செயின் பறிப்பு, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications