மேகதாது விவகாரம்: தமிழகத்துக்கு எதிராக கன்னட திரையுலகம் போராடும்-நடிகர் சிவராஜ்குமார் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: மேகதாது அணை கட்ட வலியுறுத்தி, கன்னட திரையுலகம் போராட்டத்தில் குதிக்கும் என்று முன்னணி நடிகரும், மறைந்த ராஜ்குமாரின் மகனுமான சிவராஜ்குமார் கூறினார்.

மேகதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்ட முடிவெடுத்துள்ள கர்நாடகாவை தடுக்கும் தமிழக அரசை கண்டித்து பெங்களூருவில் இன்று பெரும் பேரணி நடத்தினர் கன்னட அமைப்பினர். காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் போராட்டமும் நடத்தப்பட்டது.

Kannada film industry will protest for Cauvery dam, says Shivrajkumar

இந்நிலையில், மைசூருவில் இன்று சிவராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவின் நிலம், நீர், மொழி விவகாரங்களில் கன்னட திரையுலகம் எப்போதும் ஆதரவு தந்து வந்துள்ளது. மேகதாது விவகாரத்திலும், கன்னட திரையுலகம் தனது ஆதரவை அளிக்கும்.

மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கன்னட திரையுலகம் சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும். எந்த மாதிரி போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். எனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று நான் கூற மாட்டேன். நாட்டு நலனுக்காக நடைபெறும் போராட்டம், ஒருவரது தலைமையில் நடைபெற கூடாது. கூட்டு தலைமையின் கீழ் அந்த போராட்டங்கள் நடைபெறும். இவ்வாறு சிவராஜ்குமார் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+