கான்பூர் ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு
கான்பூர்: கான்பூர் அருகே தடம் புரண்ட ரயிலில் பயணம் செய்தவர்களின் விபரம் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரூரா பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. விபத்தால் கான்பூர் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். மேலும் உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு உடனே அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#WATCH 14 coaches of Train no 12988 #AjmerSaeldah express derail near Roora (Kanpur, Uttar Pradesh). Several injured. pic.twitter.com/s3VRDUavlu
— ANI UP (@ANINewsUP) December 28, 2016
இதற்கிடையே ரயில்வே துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
#AjmerSaeldah Express derailment: Indian Railways issue helpline numbers pic.twitter.com/vm2QDOLeZx
— ANI UP (@ANINewsUP) December 28, 2016
கான்பூர்- 0512- 2323015, 2323016, 2323018
அலகாபாத்- 0532 - 2408149, 2408128, 2407353
துண்ட்லா - 05612 - 220337, 220338, 220339
அலிகார் - 0571 - 2404056, 2404055












Click it and Unblock the Notifications