தோமர் ராஜினாமா- டெல்லி புதிய சட்டத்துறை அமைச்சராக கபில் மிஸ்ரா நியமனம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: போலி கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்ததாக டெல்லியின் சட்ட அமைச்சராக ஜிதேந்தர் சிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய சட்ட அமைச்சராக கபில் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் சமர்ப்பித்தார் என்ற வழக்கில் டெல்லி மாநில சட்ட அமைச்சராக ஜிதேந்தர் தோமர் நேற்று அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த அவர், முதல்வர் கேஜ்ரிவாலிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி மாநில புதிய சட்ட அமைச்சராக குடிநீர் வாரிய துணைத் தலைவரான கபில் மிஸ்ராவை நியமித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications