முன்னாள் அமைச்சர் கபில் சிபல் குடிபோகும் வீட்டின் ஒரு மாத வாடகையே ரூ.16 லட்சமாமே!!!!
டெல்லி: முன்னாள் சட்டம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் மாதம் ரூ.16 லட்சத்திற்கு வாடகை வீடு எடுத்துள்ளார்.
முன்னாள் சட்டம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தான் குடியிருக்கும் அரசு பங்களாவை வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிக்குள் காலி செய்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் டெல்லி ஜோர்பாக்கில் ஆயிரத்து 250 சதுர அடியில் உள்ள சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டின் ஒரு மாத வாடகை ரூ.16 லட்சம் ஆகும்.

டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் சித்தார்த் சரீனுக்கு சொந்தமான வீட்டில் தான் சிபல் வாடகைக்கு குடிபோகிறார். முன்னதாக சந்திரசேகர் அரசில் அமைச்சராக இருந்த மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் கமல் மொரார்கா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிபல் தற்போது குடிபோகும் அதே தெருவில் உள்ள ஒரு வீட்டை ரூ.18 லட்சத்திற்கு வாடைக்கு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபல் வாடைகைக்கு எடுத்துள்ள இந்த புதிய வீட்டில் அவரது சட்ட அலுவலகமும் செயல்படும். மன்மோகன் சிங் அமைச்சரவையில் உறுப்பினர் ஆகும் முன்பு சிபல் பிரபல வழக்கறிஞராக இருந்தார். அவர் பிர்லாக்கள் மற்றும் பெப்சி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.
சிபல் வீடு எடுத்துள்ள லுட்யென்ஸ் பகுதியில் மேலும் சில முன்னாள் அமைச்சர்களும் வீடு தேடுவதால் அங்கு வாடகை பலமடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் பங்களாக்களில் 10 சதவீதம் தனியாருடையது. மீதமுள்ள பங்களாக்கள் அரசுக்கு சொந்தமானவை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications