ஜெயிச்சா இப்படி ஜெயிக்கனும்... சுயேச்சையாக போட்டியிட்டு இடதுசாரியை விழி பிதுங்க வைத்த காரத் பைசல்..!
கோழிக்கோடு: கோழிக்கோடு மாவட்டம் கொடுவல்லி நகராட்சி தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட காதர் என்பவருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் காரத் பைசல் தனது முதல் தேர்தலிலேயே 568 ஓட்டுக்கள் பெற்று நகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இப்போது இதன் பின்னணி குறித்து இங்கு பார்ப்போம்.

கொடுவல்லி
கோழிக்கோடு மாவட்டம் கொடுவல்லி நகராட்சியை பொறுத்தவரை தங்க நகை வியாபாரம் அதிகம் நடக்கக் கூடிய பகுதி. வித விதமான வெளிநாட்டு நகைகளை கடைக்கு கடை அங்கு நீங்கள் பார்க்க முடியும். இஸ்லாமியர்கள் நிறைந்து காணப்படக் கூடிய இந்தப் பகுதியில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி (UDF) மிகவும் வலிமையாக திகழ்கிறது.

ஆதரவு வாபஸ்
இந்நிலையில் கொடுவல்லி நகராட்சியின் 15-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட காரத் பைசல் என்பவருக்கு முதலில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி ஆதரவு தெரிவித்தது. அவரயே தங்கள் கூட்டணியின் பிரதிநிதியாகவும் அறிவித்தது. இதனிடையே காரத் பைசல் மீது தங்கக் கடத்தல் தொடர்பான புகார் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து பைசலுக்கு டாடா காட்டி அனுப்பிய எல்.டி.எஃப். அப்துல் ரஷீத் என்பவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தது.

உத்வேகம்
எல்.டி.எஃப்.ஐ நம்பி களமிறங்கிய காரத் பைசல் நட்டாற்றில் விடப்பட்டார். இருப்பினும் அவருக்குள் இருந்த வைராக்கியமும், தன்னை நம்ப வைத்து பாதியில் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்ட இடதுசாரியை வீழ்த்த வேண்டும் என்ற உத்வேகமும் அவரை தேர்தல் களத்தில் இன்னும் வீரியமாக செயல்படத் தூண்டியது. போட்டியிடுவது வார்டு எலக்ஷனாக இருந்தாலும் கூட எல்.டி.எஃப். வேட்பாளரை இரட்டை இலக்கத்தில் கூட ஓட்டுக்களை பெற்றுவிடக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு காரியமாற்றினார்.

0 ஓட்டுக்கள்
இன்று அதன் பயனாக கொடுவல்லி நகராட்சியின் 15-வது வார்டு தேர்தல் முடிவில் காரத் பைசல் 568 ஓட்டுக்களும், எல்.டி.எஃப். வேட்பாளர் அப்துல் ரஷீத் 0 ஓட்டுக்களும், யு.டி.எஃப். வேட்பாளர் கே.கே.காதர் 468 ஓட்டுக்களும், பாஜக வேட்பாளர் சதாசிவன் 50 ஓட்டுக்களும் பெற்றிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications