கரீனா கபூரை முன்வைத்து 'மதமாற்ற' பிரசாரத்தை முன்னெடுக்கும் வி.ஹெச்.பி!
டெல்லி: பாலிவுட் நடிகை கரீனா கபூரை முன்வைத்து முஸ்லிம்களை திருமணம் செய்த இந்து பெண்களை தாய் மதத்துக்கு மாற்றும் பிரசாரத்தை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பெண்கள் அமைப்பான துர்கா வாக்னி முன்னெடுத்து வருகிறது.
பாலிவுட் நடிகர் சயீப் அலி கானை 2012ஆம் ஆண்டு கரீனா கபூர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கரீனா கபூர் இஸ்லாம் மதத்துக்கு மாறாததால் அவரது திருமணம் செல்லாது என்று சில இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துர்கா வாகினி அமைப்பின் ஏடான ஹிமாலய் தவானியின் முகப்பு அட்டையில் கரீனா கபூர் படத்தை போட்டு அவரது முகத்தின் ஒரு பகுதியில் இஸ்லாமிய பெண்களைப் போல் பர்கா அணிவித்தும் மற்றொரு பகுதியில் இந்து பெண்களைப் போல குங்குமம் வைத்தும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள துர்கா வாகினி அமைப்பின் நிர்வாகி ரஜினி துக்ரல் கூறுகையில், கரீனா கபூர் ஒரு பிரபலம் என்பதால் அவரது படத்தைப் போட்டோம். முஸ்லிம்களைதிருமணம் செய்த 16 இந்து பெண்கள் தாய் மதத்துக்கு மாற்றுமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களில் இருவரை தாய் மதத்துக்கு மாற்றியுள்ளோம். ஒருவருக்கு மறுமணமும் நடந்துவிட்டது.
மதமாற்றங்களால்தான் நாடு இந்தியா, பாகிஸ்தானாக பிரிந்தது. லவ் ஜிஹாத்தில் தவறுதலாக சிக்கும் பெண்கள் மீண்டும் தாய் மதத்துக்கு மாறுவது என்பது அவர்களுடைய உரிமை. ஆனால் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்த மறுமதமாற்றத்தை சிலர் எதிர்க்கின்றனர் என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சயீப் அலி கான், இது மிக மோசமான செயல். கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.
கரீனா கோர்ட்டுக்குப் போகலாம்- வி.ஹெச்.பி
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரகாஷ் சர்மா, கரீனா கபூரின் படத்தை பயன்படுத்தியதில் எந்த ஒரு சர்ச்சையும் இல்லை.
இது அந்த ஏட்டின் ஆசிரியருக்கும் கரீனாவுக்குமான பிரச்சனை. இதில் ஏதாவது பிரச்சனை என்று கரீனா கபூர் உணர்ந்தால் அவர் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications